ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியலை வரும் 16ஆம் தேதி அக்கட்சித் தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.
இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார்.
18ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது.
19ஆம் தேதி மாலை செய்தியாளர்கள் முன் தி.மு.க தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிடுவவார் என்றும் தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment