14 March, 2011
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்டுக்கு 12 இடங்கள் ஒதுக்கீடு
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.இ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுசெயலர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று மாலை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் முடிவில் மார்க்சிஸ்டு கட்சிக்கு 12 இடங்கள் ஒதுக்கீடு செய்து உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான உடன்பாட்டில் ஜெயலலிதாவும், ராமகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்.
அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கு 2 தொகுதிகளும், செ.கு. தமிழரசனின் குடியரசு கட்சிக்கு 1 தொகுதிகளும், சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு 1 தொகுதிகளும், கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 73 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி 161 தொகுதிகள் உள்ளன. இதில் அ.இ.அ.தி.மு.க. 144 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் 17 தொகுதிகள் ம.தி.மு.க. ஒதுக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment