25 March, 2011
Indcom Programme Slideshow
Indcom Programme Slideshow: "TEST TripAdvisor™ TripWow ★ Indcom Programme Slideshow ★ to Chennai (Madras). Stunning free travel slideshows on TripAdvisor"
21 March, 2011
14 March, 2011
தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் 16ஆம் தேதி வெளியீடு
ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியலை வரும் 16ஆம் தேதி அக்கட்சித் தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.
இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார்.
18ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது.
19ஆம் தேதி மாலை செய்தியாளர்கள் முன் தி.மு.க தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிடுவவார் என்றும் தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளின் பட்டியல் கிடைத்துள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 5 + 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மிக அதிக அளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் முறையே 4 தொகுதிகள் வழங்கியுள்ளது தி.மு.க. மாவட்ட வாரியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு:
சென்னை:
தியாகராயர் நகர், அண்ணா நகர், மயிலாப்பூர், இராயபுரம், திரு.வி.க. நகர்
திருவள்ளூர் மாவட்டம்:
ஆவடி, ஆலந்தூர், மதுரவாயல், திருத்தணி, பூந்தமல்லி
காஞ்சிபுரம் மாவட்டம்:
ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், செய்யார், மதுராந்தகம்
வேலூர் மாவட்டம்:
வேலூர், சோளிங்கர், ஆம்பூர்
திருவண்ணாமலை மாவட்டம்:
ரிஷிவந்தியம், கலசப்பாக்கம்,
கடலூர் மாவட்டம்:
விருத்தாச்சலம்,
தஞ்சாவூர் மாவட்டம்:
பேராவூரணி, பட்டுக்கோட்டை, பாபநாசம்
நாகை மாவட்டம்:
திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை
புதுக்கோட்டை மாவட்டம்:
அறந்தாங்கி, திருமயம்
அரியலூர் மாவட்டம்:
அரியலூர்
கரூர் மாவட்டம்:
கரூர், முசிறி
சேலம் மாவட்டம்:
சேலம் (மேற்கு), ஆத்தூர்
ஈரோடு மாவட்டம்:
மொடக்குறிச்சி, .ஈரோடு (கிழக்கு), திருச்செங்கோடு, காங்கேயம்
தருமபுரி மாவட்டம்:
கிருஷ்ணகிரி, ஓசூர்
சிவகங்கை மாவட்டம்:
திருவாடானை, பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி
இராமநாதபுரம் மாவட்டம்:
இராமநாதபுரம்
திண்டுக்கல் மாவட்டம்:
நிலக்கோட்டை, வேடசந்தூர்
கோவை மாவட்டம்:
சிங்காநல்லூர், வால்பாறை, அவிநாசி, தொண்டாமுத்தூர்
நீலகிரி மாவட்டம்:
ஊட்டி
மதுரை மாவட்டம்:
மதுரை (வடக்கு), மதுரை (மேற்கு), திருப்பரங்குன்றம்
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகர்
தூத்துக்குடி மாவட்டம்:
விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலி மாவட்டம்:
வாசுதேவநல்லூர், கடையநல்லூர், நாங்குனேரி, ராதாபுரம்
கன்னியாகுமரி மாவட்டம்:
விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர்

ஃபுகுஷிமா 3வது அணு உலை வெடித்தது!
ஜப்பான் கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் செயலிழந்த ஃபுகுஷிமா மாகாணத்திலுள்ள டாய்ச்சி அணு மின் நிலையத்தின் 3வது அணு உலை வெடித்து, அதிலிருந்தும் அணுக் கதிர் வீச்சு பரவி வருகிறது.
டாய்ச்சி அணு மின் நிலையத்தின் 3வது அணு உலை வெடிப்பை தாங்கள் கட்டுப்படுத்தி விட்டதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது. இந்த அணு உலையில் இருந்த ஹைட்ரஜன் வாயு அதிகரித்ததால் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அணு உலையின் மையப் பகுதியை தாங்கியுள்ள வெளிச்சுவர் வெடிப்பை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் ஜப்பான் அணு பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
3வது அணு உலை வெடித்து அதிலிருந்து புகை மண்டலம் எழும்பியது ஜப்பான் அரசு தொலைக்காட்சி காண்பித்தது. அணு உலையில் யுரேனியம் எரிபொருள் ஏற்றப்பட்டிருக்கும் நடுப்பகுதி (core) பாதிக்கப்படவில்லை என்றும், அணுக் கதிர் வீச்சு கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூகம்பத்தினால் தாக்கப்பட்டதால் அணு உலைகள் செயலிழந்ததை மட்டுமின்றி, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் டாய்ச்சி அணு மின் நிலையத்தில் உள்ள குளிரூட்டிகள் செயலிழந்தன. அவைகளை செயல்பட வைக்க நடந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடல் நீரைக் கொண்டு அணு உலைகளில் அதிகரித்துவரும் வெப்பத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.
ஆனால் கடல் நீரைக் கொண்டு அணு உலையின் வெப்பத்தை தணிக்கும் முயற்சி சரியானதல்ல என்று அணு சக்தி நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். டாய்ச்சி அணு உலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தை ஒத்தது என்றும், இதனை கட்டுப்படுத்துவது சாதாரண விடயமல்ல என்றும் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், டாய்ச்சியில் நிறுவப்பட்டுள்ள அணு உலைகள், செர்னோபில் அணு உலையை விட அதிக பாதுகாப்பாக வடிவமைகப்பட்டவை என்பதால், அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
அணு கதிர் வீச்சால் இதுவரை 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும் ஜப்பான் அரசு கூறியுள்ளது.
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்டுக்கு 12 இடங்கள் ஒதுக்கீடு
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.இ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுசெயலர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று மாலை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் முடிவில் மார்க்சிஸ்டு கட்சிக்கு 12 இடங்கள் ஒதுக்கீடு செய்து உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான உடன்பாட்டில் ஜெயலலிதாவும், ராமகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்.
அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கு 2 தொகுதிகளும், செ.கு. தமிழரசனின் குடியரசு கட்சிக்கு 1 தொகுதிகளும், சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு 1 தொகுதிகளும், கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 73 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி 161 தொகுதிகள் உள்ளன. இதில் அ.இ.அ.தி.மு.க. 144 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் 17 தொகுதிகள் ம.தி.மு.க. ஒதுக்கப்படும்.
03 March, 2011
02 March, 2011
Subscribe to:
Posts (Atom)